செயற்கை அறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாகுவதே இத்துறையின் நோக்கம். இத்துறை கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். தமிழில் செயற்கை அறிவுத்திறனை செயற்கை நுண்ணறிவு, செயற்கை அறிவாண்மை என்றும் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் அல்லது AI என்று சுருக்காக குறிப்பர். பல செயற்கை அறிவுத்திறன் நூல்கள் இத்துறையை “நுண்ணறிவு முகவர்களை ஆயும், வடிவமைக்கும்” துறை என வரையறுக்கின்றன. நுண்ணறிவு முகவர் என்பது தன் சூழ்நிலையை உணர்ந்து அதன் இலக்குக்கேற்ப தனது வெற்றி வாய்ப்புக்களுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பு ஆகும். இத்துறை மனிதர்களின் முக்கிய பண்பாண அறிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவு எப்படி தொழிற்படுகிறது என்பதை துல்லியமாக அறிந்து, விபரித்து, இயந்திரங்களில் வடிவமைக்க முடியுமா என்பதை இத்துறை ஆய்கிறது. பகுத்தறிவு, இயந்திர கற்றல், திட்டமிடல், பார்வை, உணர்ச்சி, உள்ளுணர்வு, பொது அறிவு என பல முனைகள் செயற்கை அறிவுத்திறனுடன் இணைந்து வருகின்றன.
செயற்கை அறிவுத்திறன்
Advertisements