அணுவுலை விபத்துகள்

tepco-blog480அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் (Nuclear and radiation accidents) என்பவை மக்கள், சுற்றுச்சூழல் அல்லது அணுவுலை மற்றும் கதிரியக்க மையம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தனி நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் விளைவுகள் (கதிரியக்க நச்சேற்றம்), சுற்றுச்சூழலில் பெருமளவு கதிரியக்கத்தை வெளியிடல், அணு உலையின் நடுப்பகுதி எதிர்பாராத விதத்தில் உருகுதல் ஆகியவற்றை இத்தகு விபத்துகளுக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.

1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்தில், அணு உலையின் நடுப்பகுதி (reactor core) பாதிப்படைந்து குறிப்பிடத்தக்க அளவுகளில் கதிர்வீச்சு வெளிப்பட்டதை பாரிய அணுஉலை விபத்தாகக்கருதலாம். என்றாலும், அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் பரவலாக அனைத்து நாடுகளிலும் நடந்திருக்கின்றன.

அணுவுலை விபத்துகளினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் முதல் அணுவுலைகள் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதே தொடங்கிவிட்டன. இத்தகு விபத்துகள் அணு ஆற்றல் மையங்கள் குறித்த பொது மக்களின் அச்சத்திற்கு, கவலைகளுக்கு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.

விபத்துகள் நடப்பதற்கான இடர்களைக் குறைக்கும், சுற்றுச் சூழலில் வெளிப்படும் கதிரியக்க அளவுகளைக் குறைக்கும் சில தொழில் நுட்ப நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும், பல்வேறு தாக்கங்களைக் கொண்ட பல அணுவுலை விபத்துகள், தவறுகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

2010 ஆம் ஆண்டு வெளியீட்டின்படி  உலகமெங்கும் அணுவுலை மின் உற்பத்தி நிலையங்களில் 99 விபத்துகள் நடந்துள்ளன.  செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு  57  விபத்துகள் நடந்துள்ளன. அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளில்  57  சதவிகிதம்  (56/99)

அமெரிக்காவில்  நடந்துள்ளன  2011  செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்த அணு விபத்து; 2011, மார்ச் 11 இல் நிகழ்ந்த புகுஷிமா, ஜப்பான் அணு உலை விபத்து; 1986, ஏப்ரல் 26 இல் நிகழ்ந்த செர்னொபில் அணுவிபத்து; 1979 இல் அமெரிக்காவில் முதன் முதலில் நேர்ந்த திரிமைல் தீவு விபத்து, 1961 இல் அமெரிக்க இராணுவத்தின் சோதனை அணு ஆற்றல் உலை, தாழ்திறன் அணுவுலை எண் – ஒன்று (Stationary Low-Power Reactor Number One, SL-1) விபத்து ஆகியவை குறிப்பிடத்தக்க விபத்துகளாகக் கருதப்படுகின்றன.

அணு ஆற்றலால் இயங்கிய முன்னாள் சோவியத் ஒன்றிய நீர் மூழ்கிகளின் அணு உலையின் நடுப்பகுதி பாதிப்படைந்ததால் நிகழ்ந்த விபத்துகளில் சம்பந்தப்பட்ட நீர் மூழ்கிகளின் பட்டியல்: கே-19 (1961), கே-11 (1965), கே-27 (1968), கே-140 (1968), கே-429 (1970), கே-222 (1980), கே-314 (1985), கே-431 (1985). தீவிர கதிரியக்க விபத்துகளாக சோவியத் ஒன்றிய கிஷ்டிம் [Kyshtym] பேரழிவு (1957), இங்கிலாந்தில் வின்ட்ஸ்கேல் [Windscale] விபத்து, கோசுட்டாரிக்கா கதிரியக்கச் சிகிச்சை விபத்து, எசுப்பானியாவின் சரகோசாவில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சை விபத்து, மொராக்கோவில் நிகழ்ந்த கதிரியக்க விபத்து], பிரேசில் விபத்து, மெக்சிகோ நகரத்தில் நடந்த கதிரியக்க விபத்து, தாய்லாந்தில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சைக் கருவி விபத்து, இந்தியாவின் மாயாபுரியில் நடந்த கதிரியக்கவியல் சார்ந்த விபத்து ஆகியவற்றைக் கூறலாம்.

அண்மையில் நடைபெற்ற அணுவுலை, கதிரியக்க விபத்துகளைக் குறித்த செய்திகளை பன்னாட்டு அணு சக்தி முகமையகத்தின் இணையதளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s