நானோ தொழில்நுட்பம்

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்.

நானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பியல்கள்) என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது.

அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலச்சி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. “Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications.” நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப் புறவிசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

தொழில்நுட்பத்தின் தொடக்கம்
இது பற்றி முதலில் டிசம்பர் 29, 1959 ல் இயற்பியல் ஆய்வாளரும் பின்னர் நோபல் பரிசு பெற்ற அறிஞரும் ஆகிய ரிச்சர்டு ஃபெயின்மான் ஓர் உரையை நிகழ்த்தினார். அதன் தலைப்பு “There’s Plenty of Room at the Bottom,” (உள்ளே ஏராளமாக இடம் உள்ளது). அணு அளவில் மாற்றங்கள் நடைபெறுவதை இயற்கை தடை செய்யவில்லை என்றார்.

இந்த வருங்காலத் தொழில் நுட்பத்தால் இயற்பியலின் வழி பயன்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போவதுடன் மேற்பரப்பு இழுவிசைமற்றும் வேண்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

நானோ தொழில் நுட்பம் (nanotechnology) என்ற சொல்லை முதல் முதலில் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகப் (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவர் 1974ல் அறிமுகப்படுத்தினார். (1980 களில் இந்த கருத்து மேலும் டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவரே நானோ தொழில் நுட்பத்தை பேச்சுக்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.

1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நனோ நுட்பியல் வளர்ச்சி அடையத்தொடங்கியது.

1. சிறுகூட்ட அணுதொகை அறிவியல் அல்லது துணுக்கறிவியல் (cluster science) பிறப்பு
2. புரை ஊடுருவு மின்னோட்ட வருடு நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) இன் கண்டுபிடிப்பு

இந்த தொழில் நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துகள்களை (துணிக்கைகளை) ஒன்று சேர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நானோ துணிக்கைகள் தொகையாக கொண்டு வரும் போது அவை தமது பொறியியல் தன்மையைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக பாரம்பரிய பாலிமரை நானோ தொழில் நுட்பத்தால் உறுதியூட்டப்படலாம். இவற்றை நாம் மாழைகளுக்கு (உலோகங்களிற்குப்) பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.

நானோ தொழில்நுட்பக் கட்டமைப்பு
நானோ தொழினுட்பவியலில் பயன்படுத்தப்படும் பிரதான மூலகம் காபனாகும். கடுங்கரி, வைரம் என்பன காபனின் பிறதிருப்பங்களாகும். புளோரின் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட காபனின் மூன்றாவது பிறதிருப்பமாகும். காபன் பக்கி பந்து, காபன் நானோ குழாய், காபன் நானோ ஊதுகுழாய் என்பன புளோரின் மூலம் உற்பத்தியாக்கப்பட்ட சில பொருட்களாகும்.

வான்வெளிப் பொறியியல்

வான்வெளிப் பொறியியல் (Aerospace engineering) வானூர்தி மற்றும் விண்கலம் குறித்த வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் அறிவியலின் முதன்மை பொறியியல் பிரிவாகும். இது இரு முதன்மையான ஒன்றையொன்று மேற்பொருந்திய பிரிவுகளைக் கொண்டுள்ளது: வானூர்திப் பொறியியல் மற்றும் விண்கலப் பொறியியல். முன்னது புவியின் வளிமண்டலத்தில் இயங்கும் வானூர்திகளைப் பற்றியும் மற்றது புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே விண்வெளியில் இயங்கும் விண்கலங்களைக் குறித்துமான கல்வியாகும்.

வான்வெளிப் பொறியியலில் வானூர்திகள், ஏவூர்திகள், பறக்கும் கலங்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் இவற்றின் இயற்பியல் பண்புகளுக்கும் இயக்கும் விசைகளுக்கும் அடிப்படையான அறிவியலையும் பாடங்களாக கொண்டுள்ளது. மேலும் காற்றியக்கவியலின் பண்புகளையும் நடத்தைகளையும் காற்றிதழ், பறப்பு கட்டுப்பாட்டு பரப்புகள், உயர்த்துதல், காற்றியக்க இழுவை மற்றும் பிற பண்புகளையும் ஆராய்கிறது.

இத்துறை முன்னதாக வானூர்தியியல் பொறியியல் (Aeronautical engineering) என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான “வான்வெளி பொறியியல்” என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் “ஏவூர்தி அறிவியல்”, எனப்படுகிறது.

Status

சாலஞ்சர் விண்ணோட விபத்து

Challenger explosion

Challenger explosion

சாலஞ்சர் விண்ணோட விபத்து (Space Shuttle Challenger disaster) ஜனவரி 28, 1986-ல் நிகழ்ந்த மோசமான விண்கல விபத்து. சாலஞ்சர் விண்ணோடத்தீநேர்வு பொறியியலில் பல பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தியது.

விபத்து
சாலஞ்சர் விண்ணோடம் தரையிலிருந்து கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 7 குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புளோரிடாவின் கடற் கரையோரமாக காலை 11:39 மணியளவில் கலம் சிதறி விழுந்தது. விண்ணோடத்தின் வலது திட விண்கல உயர்தியில் இருந்த ஓ-வளையம் விண்கலம் மேலெம்புகையில் செயலற்றுப் போனதும் கலம் பிளவுபடத் தொடங்கியது.

ஓ-வளைய செயலிழப்பால் கலத்தின் திட விண்கல உயர்தியில் பிளவு ஏற்பட்டு அழுத்தமூட்டப்பட்ட வெப்ப வாயுக்கள் திட விண்கல விசைப்பொறியினூடகப் பரவி கலத்தின் எரிபொருள் தொட்டியிலும், திட உயர்தியின் பக்கங்களிலும் மோதுகையை உருவக்கியது. இதனால் வலது பக்க திட உயர்த்தியின் பின்பக்க இணைப்பு பிரிந்து வெளிப்புர தொட்டியின் அமைப்பில் முறிவை ஏற்படடுத்தியது. காற்றியக்கம் சார்ந்த விசைகள் அதன் சுற்றுப்பாதை நிறுத்தியை உடைத்தது.

குழுவினர் தங்கும் தொகுதி மற்றும் கலத்தின் மற்ற பகுதிகள் கடலுக்கடியில் நீண்ட தேடலுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டன. விண்ணோடம் முதலில் பிளவுபடத் தொடங்கியபோது உள்ளிருந்த குழுவினர்கள் உயிருடன் இருந்ததாக அறியப்படுகிறது. குழுவினர் இறந்த துல்லியமான நேரம் தெரியாவிட்டலும் விண்ணோடத்தில் அவசரத்தில் தப்பித்துக்கொள்ளும் வசதி அமைப்புகள் இல்லாததால் விண்கலம் கடலில் மோதுகையில் குழுவினர் பிழைத்துக் கொள்ள வழியின்றி போனது. விண்ணோடம் செலுத்தப்படுவதை பலர் நேரடியாகப் பார்த்தனர். கிரிஸ்டா மெக் அஃபி என்ற ஆசிரியரும் விண்வெளிக்குழுவில் இருந்தார்.

Challenger_flight_51-l_crew

Challenger Flight Crew

விபத்திற்கு பிறகு 32 மாதங்களுக்கு விண்கல ஆய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் விண்ணோடத் தீநேர்வைப் பற்றி ஆய்வு செய்ய ரோஜர் ஆணையம் எனும் சிறப்பு ஆணையத்தை அமைத்தார்.

அக்குழு அளித்த அறிக்கையில் விபத்திற்கு காரணம் நாசாவின் நிர்வாக மற்றும் முடிவெடுக்கும் முறைகளும் என்று கூறப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில் மார்டின் தியோகோல் என்ற ஒப்பந்தி உருவாக்கிய திட விண்கல உயர்த்தி அமைப்பில் பெருங்கேடு தருகின்ற குறைபாடுகளை 1977-ம் ஆண்டு முதல் நாசா நிர்வாகிகள் அறிந்திருந்தும் அதனை சரியாக தெரிவிக்க தவறிவிட்டனர் என்று சொல்லப்பட்டது. மேலும் பொறியாளார்கள் விண்கலம் செலுத்தப்படுவதால் ஏற்படப்போகும் அபாயங்களைப் பற்றி விளக்கியும், மேலாளர்கள் அதனை மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காததையும் சுட்டிக்காடினர். இறுதியாக ரோஜர் ஆணையம் விண்கலம் செலுத்தப்படும் முன்பு கையாளப்படவேண்டிய ஒன்பது வழிமுறைகளை நாசாவிற்கு பரிந்துரை செய்தது.

அணுவுலை விபத்துகள்

tepco-blog480அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் (Nuclear and radiation accidents) என்பவை மக்கள், சுற்றுச்சூழல் அல்லது அணுவுலை மற்றும் கதிரியக்க மையம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தனி நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் விளைவுகள் (கதிரியக்க நச்சேற்றம்), சுற்றுச்சூழலில் பெருமளவு கதிரியக்கத்தை வெளியிடல், அணு உலையின் நடுப்பகுதி எதிர்பாராத விதத்தில் உருகுதல் ஆகியவற்றை இத்தகு விபத்துகளுக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.

1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்தில், அணு உலையின் நடுப்பகுதி (reactor core) பாதிப்படைந்து குறிப்பிடத்தக்க அளவுகளில் கதிர்வீச்சு வெளிப்பட்டதை பாரிய அணுஉலை விபத்தாகக்கருதலாம். என்றாலும், அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் பரவலாக அனைத்து நாடுகளிலும் நடந்திருக்கின்றன.

அணுவுலை விபத்துகளினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் முதல் அணுவுலைகள் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதே தொடங்கிவிட்டன. இத்தகு விபத்துகள் அணு ஆற்றல் மையங்கள் குறித்த பொது மக்களின் அச்சத்திற்கு, கவலைகளுக்கு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.

விபத்துகள் நடப்பதற்கான இடர்களைக் குறைக்கும், சுற்றுச் சூழலில் வெளிப்படும் கதிரியக்க அளவுகளைக் குறைக்கும் சில தொழில் நுட்ப நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும், பல்வேறு தாக்கங்களைக் கொண்ட பல அணுவுலை விபத்துகள், தவறுகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

2010 ஆம் ஆண்டு வெளியீட்டின்படி  உலகமெங்கும் அணுவுலை மின் உற்பத்தி நிலையங்களில் 99 விபத்துகள் நடந்துள்ளன.  செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு  57  விபத்துகள் நடந்துள்ளன. அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளில்  57  சதவிகிதம்  (56/99)

அமெரிக்காவில்  நடந்துள்ளன  2011  செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்த அணு விபத்து; 2011, மார்ச் 11 இல் நிகழ்ந்த புகுஷிமா, ஜப்பான் அணு உலை விபத்து; 1986, ஏப்ரல் 26 இல் நிகழ்ந்த செர்னொபில் அணுவிபத்து; 1979 இல் அமெரிக்காவில் முதன் முதலில் நேர்ந்த திரிமைல் தீவு விபத்து, 1961 இல் அமெரிக்க இராணுவத்தின் சோதனை அணு ஆற்றல் உலை, தாழ்திறன் அணுவுலை எண் – ஒன்று (Stationary Low-Power Reactor Number One, SL-1) விபத்து ஆகியவை குறிப்பிடத்தக்க விபத்துகளாகக் கருதப்படுகின்றன.

அணு ஆற்றலால் இயங்கிய முன்னாள் சோவியத் ஒன்றிய நீர் மூழ்கிகளின் அணு உலையின் நடுப்பகுதி பாதிப்படைந்ததால் நிகழ்ந்த விபத்துகளில் சம்பந்தப்பட்ட நீர் மூழ்கிகளின் பட்டியல்: கே-19 (1961), கே-11 (1965), கே-27 (1968), கே-140 (1968), கே-429 (1970), கே-222 (1980), கே-314 (1985), கே-431 (1985). தீவிர கதிரியக்க விபத்துகளாக சோவியத் ஒன்றிய கிஷ்டிம் [Kyshtym] பேரழிவு (1957), இங்கிலாந்தில் வின்ட்ஸ்கேல் [Windscale] விபத்து, கோசுட்டாரிக்கா கதிரியக்கச் சிகிச்சை விபத்து, எசுப்பானியாவின் சரகோசாவில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சை விபத்து, மொராக்கோவில் நிகழ்ந்த கதிரியக்க விபத்து], பிரேசில் விபத்து, மெக்சிகோ நகரத்தில் நடந்த கதிரியக்க விபத்து, தாய்லாந்தில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சைக் கருவி விபத்து, இந்தியாவின் மாயாபுரியில் நடந்த கதிரியக்கவியல் சார்ந்த விபத்து ஆகியவற்றைக் கூறலாம்.

அண்மையில் நடைபெற்ற அணுவுலை, கதிரியக்க விபத்துகளைக் குறித்த செய்திகளை பன்னாட்டு அணு சக்தி முகமையகத்தின் இணையதளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

செயற்கை அறிவுத்திறன்

AI  செயற்கை அறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாகுவதே இத்துறையின் நோக்கம். இத்துறை கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். தமிழில் செயற்கை அறிவுத்திறனை செயற்கை நுண்ணறிவு, செயற்கை அறிவாண்மை என்றும் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் அல்லது AI என்று சுருக்காக குறிப்பர். பல செயற்கை அறிவுத்திறன் நூல்கள் இத்துறையை “நுண்ணறிவு முகவர்களை ஆயும், வடிவமைக்கும்” துறை என வரையறுக்கின்றன. நுண்ணறிவு முகவர் என்பது தன் சூழ்நிலையை உணர்ந்து அதன் இலக்குக்கேற்ப தனது வெற்றி வாய்ப்புக்களுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பு ஆகும். இத்துறை மனிதர்களின் முக்கிய பண்பாண அறிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவு எப்படி தொழிற்படுகிறது என்பதை துல்லியமாக அறிந்து, விபரித்து, இயந்திரங்களில் வடிவமைக்க முடியுமா என்பதை இத்துறை ஆய்கிறது. பகுத்தறிவு, இயந்திர கற்றல், திட்டமிடல், பார்வை, உணர்ச்சி, உள்ளுணர்வு, பொது அறிவு என பல முனைகள் செயற்கை அறிவுத்திறனுடன் இணைந்து வருகின்றன.

State of Palestine

Pal200px-Palestine_1020BC_Smith_1915estine is a geographic region in Western Asia between the Mediterranean Sea and the Jordan River. It is sometimes considered to include adjoining territories. The name was used by Ancient Greek writers, and was later used for the Roman province Syria Palaestina, the Byzantine Palaestina Prima and the Umayyad and Abbasid province of Jund Filastin.

Situated at a strategic location between Egypt, Syria and Arabia. The region has been controlled by numerous different peoples, including Ancient Egyptians, Canaanites, Israelites, Assyrians, Babylonians, Persians, Ancient Greeks, Romans,Byzantines, the Sunni Arab Caliphates, the Shia Fatimid Caliphate, Crusaders, Ayyubids, Mameluks, Ottomans, the British and modern Israelis and Palestinians.

Boundaries of the region have changed throughout history, and were last defined in modern times by the Franco-British boundary agreement (1920) and the Transjordan memorandum of 16 September 1922, during the mandate period. Today, the region comprises the State of Israel and Palestinian territories in which the State of Palestine was declared.

Glad to welcome you!

Bismillah hirrahma nirrahim, Peace be upon you.

I personally welcome you all to my wordpress blog, thank you for visiting here. You can continue reading my post since today, about IT related and Islamic related In sha Allah.

Yours
Haleeth Mohamed